தோப்பூர் பிரதேசத்தில் உப பிரதேச செயலகமாக இயங்கி வரும் பிரதேச செயலகத்தையும் தரமுயர்த்த வேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெரிவிப்பு.


எப்.முபாரக் -
திருகோணமலை மாவட்டத்தின், தோப்பூர் பிரதேசத்தில் உப பிரதேச செயலகமாக இயங்கி வரும் பிரதேச செயலகத்தையும் தரமுயர்த்த வேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் தெரிவித்துள்ளார்.
அவர்  விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தோப்பூர் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி அப்பிரதேச மக்கள் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அரசியல் ரீதியாக மட்டுமன்றி, அகிம்சைப் போராட்டத்திலும் ஈடுபட்டு தமது கோரிக்கைகளைக்கோரி வந்தனர்.
முஸ்லிம்கள் வாழும் தோப்பூர் பிரதேசத்தின் செல்வ நகர்ப்பகுதி, செருவில பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்ட பெரும்பான்மையைக் கொண்ட முஸ்லிம் குடும்பங்களைக் கொண்ட பகுதியாகும்.
அதன் காரணமாக, கடந்த காலங்களில் அப்பகுதிக்குள் இருக்கும் நீநாகேணி முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை தொடர்பில் இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையிலும், காணி உறுதிப்பத்திரம் வழக்கப்படாத நிலையிலும் பல அநியாயங்கள் இன்னும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

புராதன பூமி என்ற போர்வையில் காணிகள் அபகரிக்கப்படுகின்ற நிலைமையே இங்கு காணப்படுகின்றது. மக்களின் நியாயமான கோரிக்கை எதுவாக இருந்தாலும், எந்த இனமாக இருந்தாலும் நிறைவேற்றப்பட வேண்டும்.
நிலத்தொடர்போடு காணப்படும் நியாயபூர்வமான தோப்பூர் பிரதேச செயலகக்கோரிக்கை இந்தத்தருணத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அதனை எமது அரசியல் தலைமைகள் கட்சி, இன வேறுபாடின்றி முன்னெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -