இன ஐக்கியத்தைக் குலைக்கும் செயற்பாடுகளுக்கு துணை போகக் கூடாது! - முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட ஏ.சி. யஹியாகான்




ல்முனையில் இன்று எழுந்துள்ள அசாதாரண நிலைமைகள் கவலை தருகின்றன. இரு தரப்பினரும் இருந்து, பேசி எங்களுக்குள்ளே இணக்கத்தை இலகுவாகக் காணக் கூடியதான ஒரு விடயம் இன்று பூதாகரமாக பெருப்பிக்கட்டுள்ளமையானது ஆரோக்கியமான ஒன்றல்ல என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளரும் 'ஹொனாலி' ஹோல்டிங் நிறுவனப்
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கல்முனைப் பிரதேசத்தில் காலாகாலமாக ஐக்கியத்துடனும் இணக்கப்பாட்டுடனும் வாழ்ந்து வந்த முஸ்லிம், தமிழ் சமூகத்தினரிடையே இன்று ஏற்பட்டுள்ள முரண்பாடு அந்தப் பிரதேசத்தில் அசாதாரண நிலைமையை தோற்றுவித்துள்ளமை வருந்தத்தக்க விடயம் அல்ல.

எந்த விடயத்தையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் அணுகுவதன் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்
இன்று கல்முனையில் இடம்பெறும் விடயங்கள் கூட இரு தரப்பினரும் பேசித் தீர்வு காணக் கூடிய ஒன்றே.
கல்முனை வடக்கு தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துதல், கல்முனையை நான்காகப் பிரித்தல், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை வழங்குதல் போன்றன தொடர்பில் ஆராய்வதற்காக ஏலவே குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில், குறித்த குழு இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் முன்னர், திடீரென கல்முனையில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை ஏற்றுக் கொள்ளக் கூடியனவல்ல.
தமிழ்த் தரப்பு, முஸ்லிம் தரப்பு அரசியல் தலைமைகள் இணங்கியே குறித்த குழு அமைக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும்போது இவையனைத்தையும் குழப்பும் வகையில் இவ்வாறான நிலைமை தோன்றியுள்ளதன் பின்னணியில் சில பௌத்த பிக்குகளும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் செயற்படுவது இன்று தெரிய வருகிறது.
கல்முனையில் வாழும் தமிழ் பேசும் மக்களிடையிலான இன ஐக்கியத்தைக் குலைக்கும் ஒரு சூழ்ச்சியாகவே இதனை நோக்க முடியும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் இன ஐக்கியத்தை விரும்பும் ஒருவர். இன முரண்பாடுகளை ஒரு போதும் விரும்பாதவர்.
அதேபோன்றே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்களும் காணப்படுகிறார். எந்த விடயத்தையும் நிதானத்துடனும் அமைதியாகவும், ஆழமாகவும் நோக்குபவர்.
கல்முனை விவகாரத்திலும் அவர் தூர நோக்குடனேயே செயற்பட்டு வருகிறார். கல்முனையில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதில் கரிசனையுடன் செயற்படுபவர்.
எந்த இனமும் மற்றொரு இனத்தினால் பாதிக்கப்படக் கூட என்பதில் மிக அக்கறை கொண்டு செயற்பட்டு வருகிறார்.
இந்நிலையில், வெண்ணெய் திரண்டு வரும்போது தாழியை உடைப்பது போன்ற செயற்பாடுகள் இடம்பெறுவது வேதனைக்குரியது.

எனவே இன ஐக்கியத்தைப் பிரிக்கும் செயற்பாடுகளுக்குத் துணை போகாது பிரச்சினைக்குரிய தரப்பினர்கள் மட்டும் அவர்களின் அரசியல் தலைமைகளுடன் இணைந்து இந்த விவகாரங்களைப் பேசித் தீர்த்துக் கொள்வதே சிறந்தது. இதன் மூலமே கல்முனையில் இரு சமூகங்களின் ஒற்றுமையைப் பாதுகாத்து
பாதுகாத்து ஐக்கியத்தை கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -