வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் கிராம மட்ட அபிவிருத்திக்கான முன்னுரிமைப்பட்டியலை மக்கள் பங்கேற்புடன் முன்வைக்கும் நிகழ்வு கடந்த வாரம் ஆவரங்காலில் உள்ள சிவசக்தி அறக்கட்டளை மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றுகையில், பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் பிரதேச சபைகளுக்கு நாட்டின் அரசியற்கட்டமைப்பில் பெரும் கடப்பாடும் மக்களின் ஆணையும் உள்ளது. அந்த வகையில் சமூக பொருளாதார அரசியல் துறைகளில் ஏற்படும் சிறந்த அளவு ரீதியிலான மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்துவதில் முனைப்புடன் செயற்படுகின்றோம்.
நாட்டில் நிலவிய யுத்தம் மற்றும் அரசியல் தீர்வின்மை போன்றன எமது பிரதேசங்களின் அபிவிருத்தியை வெகுவாகப் பாதித்துள்ளது. உள்ளூராட்சி சபைகளின் வகிபாகத்தினை மேற்கண்ட நிலைமைகள் மிகுந்த கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இந் நிலையில் நாட்டின் ஏனைய பாகங்களில் அபிவிருத்திக்காக பிரதேச சபைகள் அடைந்திருக்கின்ற உட்கட்டுமான ரீதியிலான மாற்றங்களைக் காட்டிலும் நாம் பின்நிற்கின்றோம் என்பதை எம்மால் வெளிப்படையாகவே உணரமுடிகின்றது.
அபிவிருத்திக்காக் தயார்ப்படுத்த வேண்டிய விடயங்களை செவ்வனே ஆரம்பிக்கவேண்டிய கடப்பாடு மக்களால் தெரிவு செய்யப்பட்ட எமக்குள்ளது. இதில் பல திட்டங்களை எமது சபை தற்போது ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றது. மேலும் இவ் ஆட்சிக்காலத்தில் சபையின் நிதி நிலைமைகளை ஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சபை ரீதியில் நாம் ஆரம்பித்துள்ளோம். நடைமுறைப்படுத்துவதற்கு நிதி இயலுமை மற்றும் ஏனைய வளங்கள் காணப்படும் திட்டங்களை ஏற்கனவே நாம் ஆரம்பித்து நடத்தி வருகின்றோம்.
மத்திய மற்றும் மாகாண சபையின் ஒதுக்கங்கள் வாயிலாகவும் அபிவிருத்திகளைப் புரிகின்றோம். இந்நிலையில், தற்போது உலக வங்கியின் நிதி ஒதுக்கத்தின் கீழ் எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கான அபிவிருத்தித் திட்ட சிபாரிசுகள் எம்மிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டுள்ளன. அக் கடமையினை ஈடேற்றும் வகையிலேயே இன்றைய கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்களில் முன்னுரிமைப்படுத்தல் உத்தியாக கிராமங்கள் தோறும் மக்களைத்திரட்டி அங்கு வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அபிவிருத்திகளில் மீளவும் கிராமங்களில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளின் வாக்களிப்பின் வாயிலாக எமது பிரதேச மட்ட அபிவிருத்திற்கான அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஜனநாயக பூர்வமான மக்கள் பங்கேற்பு அபிவிருத்தித்திட்டம் ஒன்றை முன்வைப்பது என்பது அபிவிருத்தியின் உச்சப்பயனை மக்கள் அடைந்து கொள்வதற்கான சிறந்த உத்தியாகும். பிரதேசங்களில் பாரபட்சமற்ற அபிவிருத்திக்கு வித்திடும் முறைமையாக இச் செயற்றிட்டம் காணப்படுகின்றது. இவ்வாறான பங்கேற்பு உத்திகளின் வாயிலாக அபிவிருத்தியில் தாமாகவே அபிவிருத்தியில் செயலாற்றும் மனநிலையை மக்களிடத்தில் ஏற்படுத்த முடிகின்றது. மக்களும் சக்திமயமாக்கப்பட்டுள்ளனர்.
கிராமிய பங்கேற்பு மதிப்பீடு (Pயசவiஉipயவiபெ சுரசயட யுppசயளையட (Pசுயு)) வாயிலாக கிராமிய மக்களை ஊக்குவித்து கிராமத்தின் அபிவிருத்திச் செயற்பாட்டின் சகல படி நிலைகளிலும் அவர்கள் பொறுப்பினை ஏற்பவர்களாகவும் அதற்குப் பதில் கூறுபவர்களாகவும் அபிவிருத்தியின் நிலைபேறான தன்மைகளை அனுபவிப்பவர்களாகவும் மாற்றப்படுவதற்கு அடிநாதமாக இவ் எல்லைப் பிரிப்பு செயற்றிட்டம் அமைந்தமையை காத்திரமான அபிவிருத்திக்கான தளமாகவே எமது சபை கருதுகின்றது. இவ்வாறு வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.