முசலி பிரதேச கிராம சக்தி வேலைத் திட்டம்-காதர் மஸ்தான் தலைமையில்.



ன்னார் முசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிது அவர்களுடைய கிராம சக்தி வேலைத் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் தலைமையில் இன்று 31.05.2019 பிரதேசச் செயலக கேட்போர் கூடத்தில் முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் அவர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.

இக் கூட்டத்தில் வாழ்வாதாரம்,விவசாய உற்பத்தி,கிராம மட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் போன்றவற்றை சுழற்சி முறையில் பகிர்ந்தளித்தல் சம்பந்தமாகவும் அடுத்த கட்ட வேலைத் திட்டங்கள் சம்பந்தமாகவும் பேசப்பட்டன.

இக்கூட்டத்தில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஹலிமுதீன், அபிவிருத்தி இணைப்பாளர் என்.எம்.றாபி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஜனாப்.பைசல் கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் மக்கள் தொடர்பு அதிகாரி ஜனாப்.ஏ.சி.நிஷார்தீன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு-

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -