சிலோன் மீடியா போரம் விடுத்துள்ள புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி


எஸ்.அஷ்ரப்கான்-னங்களுக்கிடையிலான ஒற்றுமை, புரிந்துணர்வு மூலம் நாட்டில் நிரந்தர சமாதானமும் ஐக்கியமும் ஏற்பட்டு இலங்கைத்திருநாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ பிரார்த்திக்கின்றோம் என்று சிலோன் மீடியா போரம் விடுத்துள்ள புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைப்பின் தேசியத் தலைவர் றியாத் ஏ மஜீத் இவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இஸ்லாமியர்களாகிய நாம் அமைதியாகவும் பொறுமையுடனும், செயற்பட்டு இப்புனிதமான பெருநாள் தினத்தில் எமது நாட்டில் நிலையான சமாதானம் ஏற்பட அனைவரும் இரு கரமேந்தி பிரார்த்திக்கின்றோம்.

முஸ்லிம் இளைஞர்கள் மிகவும் அவதானமாகவும் பொறுமையுடனும் செயற்படவேண்டிய காலகட்டத்தில் வீண் விளையாட்டுக்கள் பொழுதுபோக்குகளை தவிர்த்து அமைதியாக இப்பெருநாளை கொண்டாட முன்வர வேண்டும்.
அண்மைய அசம்பாவிதங்களின் பின்னர் கைதுசெய்யப்பட்டு சிறையில் வாடுகின்ற அப்பாவி முஸ்லிம் சகோதர சகோதரிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களும் சகோதரத்துவத்துடனும் சௌஜன்யத்துடனும் வாழ்வதற்கு இப்புனித பெருநாள் தினத்தில் பிரார்த்திக்கின்றோம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -