சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்த ஊடகங்கள் பங்களிப்பு நல்க வேண்டும்


ற்போதைய அமைதியற்ற சூழ்நிலையில் சந்தேகமும், நம்பிக்கையின்மையும் உருவாகியுள்ள இந்தத் தருணத்தில் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்த ஊடகங்கள் பங்களிப்பு நல்க வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அந்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவிக்கையில், மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டும் வகையில், சில சம்பவங்களை மிகைப்படுத்தி அறிக்கையிட வேண்டாமென ஊடக நிறுவனங்களிடம் கோரிக்கை விடுப்பதாக குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சில பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டதனால் முஸ்லிம் மக்கள் அச்சத்துடனும், மன உளைச்சலுடனும் உள்ளனர். அரசியல் தேவைகளுக்காக இயங்கும் சில ஊடகங்கள் ஒரு சமூகத்திற்கு எதிராக மற்றுமொரு சமூகத்தை தூண்டிவிடுவதன் மூலம் முரண்பாடு அதிகரிக்கின்றது. இதனால், அரசாங்க மற்றும் ஆளுங்கட்சி தரப்பிலுள்ள அரசியல் கட்சிகளும் நெருக்கடிக்கு உள்ளாவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -