சாய்ந்தமருது, கல்முனை பிரதேச 225 பேருக்கு இலவச மின்னிணைப்பை பெற்றுக்கொடுத்த ஹரீஸ் எம்.பி !!

நூருள் ஹுதா உமர்-
சதி வாய்ப்பற்ற ஏழைகளுக்கு இலவச மின்சார இணைப்பை வழங்கும் நிகழ்வு இன்று மாலை மஃமூத் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கம்பரலிய திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாய்ந்தமருது, கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 225 வசதி குறைந்த பொதுமக்களுக்கான மின்சார இணைப்பை பெருவதற்கான ஆவணங்களை இன்று மக்களிடம் அதிதிகளாக கலந்து கொண்ட பிரமுகர்கள் வழங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.பைருஸ், எம்.எஸ்.எம்.நிசார் ஜே.பி, சட்டத்தரணி ரோஷன் அக்தர், சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், நஸ்ரினா முர்ஷித் ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

உங்களின் துஆ மூலமே இன்று நாம் நிம்மதியாக இருக்கிறோம். பிரபாகரனின் ஆதிக்கத்தின் போது தேரர்களின் உதவியை நாடி நாங்கள் தமிழ் மக்களை பலிவாங்கவில்லை. அப்போதைய காலகட்டத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் அரசை ஆட்டுவிக்கும் பலம்கொண்டவராக இருந்த காலத்திலும் நாங்கள் தமிழர்களை தட்டிகழிக்க வில்லை. சிரேஷ்ட அரசியல்வாதிகள் இருந்தும் மக்களின் ஒற்றுமைக்கு தமிழ் தலைமைகள் வழிசமைக்க வில்லை.
எம்.எஸ். காரியப்பர் செய்த பிரிப்பின் காரணமாக நான்காக இருந்த சபையையை 1987 ஆம் ஆண்டு ஏ.ஆர்.எம். மன்சூர் இணைத்தார். பின்னர் பல சம்பவங்கள் நடந்து முடிந்திருக்கிறது. இந்த சபையை முன்னர் இருந்தது போன்று நான்காக பிரிப்போம் என்பதே எமது மக்களுக்கு தேவையானது.

தமிழ் மக்களுக்கு பல நகரங்கள் இருந்தாலும் முஸ்லிங்களுக்கு உள்ள ஒரே நகரம் கல்முனை மட்டுமே. இந்த நகரில் நாங்கள் பெரும்பான்மையாக வாழல்வதால் இதனை தக்கவைக்க பல வருடங்களாக சிரமத்துடன் போராடுகிறேன் என்றார். காலதாமதமாக இந்த விடயம் இருந்து வர காரணம் என்ன என்பதை நாம் அனுபவ ரீதியாக அண்மையில் நடைபெற்ற சம்பவங்களின் பின்னால் இருக்கும் விடயமே என மேலும் தெரிவித்தார்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -