கிழக்கில் நாளை தமிழ்சிங்கள பாடசாலைகள் ஆரம்பம்!


சகலஏற்பாடுகளும் பூர்த்தி என்கிறார்மாகாணகல்விப்பணிப்பாளர் மன்சூர்!
காரைதீவு நிருபர் சகா-
கிழக்கு மாகாணத்தில்kநாளை(6) திங்கட்கிழமை தமிழ் சிங்கள பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான உயர்மட்டக்கூட்டம் கிழக்குமாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நேற்றுமுன்தினம் (03) வெள்ளிக்கிழமை திருகோணமலையில் ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாணப் பிரதம செயலாளர் சரத்அபேகுணவர்த்தன முத்துபண்டா கிழக்குமாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் உள்ளிட்ட உயர்மட்ட கல்வி நிருவாகிகள் கலந்தகொண்டனர்.கிழக்கிலுள்ள 17 கல்வி வலயங்களின் வலயக்கல்விப்பணிப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

முப்படை மற்றும் பொலிஸ்திணைக்களத்தின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். அதிபர்கள் தேவையான ஆலோசனைகளை அந்தந்த பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரியைத் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும் என அங்கு கூறப்பட்டது. அந்தந்த வலயக்கல்விப்பணிப்பாளர்களின் கண்காணிப்பு கட்டாயம் இடம்பெறவேண்டும்.

தமிழ்வலயங்களில் முஸ்லிம்ஆசிரியர்களும் முஸ்லிம்வலயங்களில் தமிழ்ஆசிரியர்களும் கடமையாற்றிவருகின்றனர். இந்நிலையில் சில முஸ்லிம் ஆசிரியர்கள் பாதுகாப்புக்கருதி இடமாற்றம் கோரியுள்ளனர். அவர்களை அந்தந்த வலயக்கல்விப்பணிப்பாளர்கள் அதேவலயத்தில் பிரதானவீதிக்கருகே வசதியான இடங்களில் அமர்த்துவதன்மூலம் கையாளமுடியுமெனக்கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக கல்குடல வலயத்தில் 166முஸ்லிம் ஆசிரியர்களும் மட்டு.மேற்கு வலயத்தில் 16முஸ்லிம் ஆசிரியர்களும் கடமையாற்றிவருவதும் இவ்வலயங்களில் ஏலவே பாரிய ஆசிரியர் தட்டுப்பாடு நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 6ஆம் திகதி அரச தமிழ் சிங்களப் பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் 5வார நீண்டவிடுமுறையின் பின்னர் பலத்த பாதுகாப்பின் மத்தியில் திறக்கப்படவுள்ளன.

கடந்த 22ஆம் திகதி திறக்கப்படவிருந்த தமிழ்சிங்களப்பாடசாலைகள் நாட்டிலேற்பட்ட அசாதாரணசூழ்நிலை காரணமாக கடந்த இருவாரங்களாக விசேடலீவு வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை முஸ்லிம் பாடசாலைகள் கடந்த 17ஆம் திகதி திறக்கப்படவிருந்தும் அசாதாரண சூழ்நிலை காரணமாக விடுமுறைவழங்கப்பட்டிருந்தது.

எனினும் புனித ரமழான் நோன்பு விடுமுறை 2019.05.04ஆம் திகதி தொடக்கம் 2019.06.09ஆம் திகதி வரை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஆதலால் திங்கள்(6) முஸ்லிம்பாடசாலைகள் திறக்கப்படமாட்டாது. ஆக தமிழ் முஸ்லிம் பாடசாலைகள் மட்டுமே திறக்கப்படவிருக்கின்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -