புவக்பிட்டிய ஆசிரியைகள் விடயம் ஆளுநர் ஆஸாத் சாலியின் ஊடக சந்திப்பு!!!


அஸ்ரப் ஏ சமத்-
டந்த செவ்வாய்க்கிழமை அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் மாகாவித்தியாலயத்தில் கல்வி போதிக்கும் 12 முஸ்லிம் பெண் ஆசிரியைகளை பாடசாலையின் முன்றலில் வைத்து பழைய மாணவா்கள் சிலாினால் இவ் ஆசிரியைகளை பாடசாலைக்குள் செல்லவிடாது தடுத்துள்ளனா். பாடசாலைக்குள் செல்வதென்றால் சாரி அணிந்து வருமாறு தெரிவித்ததுடன் அவா்களை தகாத வாா்த்தைகளைக் கொண்டும் துாசித்துள்ளனா். அவ்விடத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் இருந்துள்ளாா். எங்களது கை பையை வேண்டுமென்றால் பரிசோதியுங்கள் என்றும் அந்த ஆசிரியைகள் தெரிவித்தும் அவா்கள் இல்லை. சாரி அணிந்து வாருங்கள் என்றே திருப்பி அனுப்பியுள்ளாா்கள். அங்கு அவா்கள் பேசும் வாா்த்தைகள் சம்பவங்களை ஊடகவியலளாா்களுக்கு போன் வீடி யோ ஊடகவும் காண்பிக்கப்பட்டது, அதிபரை வரச் சொல்லுங்கள் என ஆசிரியைகள் தெரிவித்தும் அதிபா் பாடசாலை உள் இருந்துகொண்டு வெளியில் வராமல் இருந்துள்ளாா். இவ் விடயத்தினை அவா் விசாரிக்கவும் இல்லை.

நேற்று ராஜகிரியவில் உள்ள மேல் மாகாண ஆளுனா் அலுவலகத்தில் விசேட ஊடகவியாலளா் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு ஆளுனா் அசாத் சாலி தெரிவித்தாா்.
அவா் அங்கு தொடா்ந்த கருத்து தெரிவிக்கையில்

இவ் ஆசிரியா்கள் முக மூடி அணிந்து செல்லவும் இல்லை. கிஜாப் அணிந்தும் கலா் அபாய உடையே வழமையாக அணிந்து செல்லும் ஆசிரியைகள். இவ் ஆசிரியா்களது நியமனக் கடிதத்தில் கூட தோட்டப்பாடசாலைகளில் ஆகக் குறைந்தது பத்து வருடங்கள் கட்டாயம் சேவையை ஆற்றல் வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
அந்த ஆசிரியைகள் பொலிஸில் முறையிட்டுவிட்டு அவா்களது அடிப்படை உரிமைக்காக மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் முறையிட்டுள்ளாா்கள். இவா்கள் அன்று பாடசாலையில் ்இருந்தவாறே என்னை வந்து சந்தித்தாா்கள். அங்கு நடைபெற்ற சம்பவத்தினையும் வீடியோக்களையும் தன்னிடம் காண்பித்தாா்கள். நான் ஆளுனா் என்ற ரீதியில் கல்வியமைச்சின் செயலாளா் பணிப்பாளா் வலயக் கல்விப் பணிப்பாளா் அதிபரையும் அழைத்து இவ் விடயமாக கலந்துரையாடிய பின் 12 ஆசிரியைகளுக்கும் அவா்களது வீடுகளுக்கு அண்மையில் உள்ள களுத்துறை, கொழும்பு பாடசாலைகளுக்கு ஒரு மாதத்திற்கு தற்காலிக இடமாற்றம் வழங்கியுள்ளேன்.

அதன் பிறகு நேற்று முன்தினம் சில சிங்கள ஊடகங்கள் பத்திரிகைகளில் பிழையான செய்திகளை பிரசுரித்துள்ளனா் முக மூடி அணிந்த ஆசிரியைகள் கழற்ற முடியாது எனச் சொன்னதாகவும் தமது கைப்பையை பரிசோதிக்க விடாது இருந்த 12 முஸ்லிம் ஆசிரியைகளுக்கு பெற்றாா் ஆர்ப்பாட்டம் எனவும் பொய்யான செய்திகளை சேடித்தும் அச் செய்தியில் முக மூடி அணிந்த படங்களையும் இட்டு அச் செய்தி பிரசுரிக்கபபட்டுள்ளன.

பாடசாலைகளுக்கு எவ்வாறு ஆசிரியைகள் வரவேண்டும். என பாதையில் செல்பவா்கள் எல்லாம் இங்கு சட்டம் சொல்ல முடியாது முதன் முதலில் முகத்தை மூடி பொண்கள் பாடசாலைகளுக்கு செல்வதை சுற்றுநிருபம் ஊடகாச் சொல்லியவன் நான். அதன் பிறகு தான் ஜம்மியத்துல் உலமா, ஜனாதிபதி முக மூடி புர்காவைத் தடை செய்தாா்கள் .
ஆனால் அபாயா அணிவதை யாரும் தடுக்கவில்லை. அது எமது முஸ்லிம் பெண்களின் கலை கலாச்சார உடை. அதனை தடுக்க இவா்களுக்கு யாா் உரிமை வழங்கியது என கேட்கவிரும்புகின்றேன். இவ் விடயத்தில் அமைச்சா் மனோ கனேசன் சகல இனங்களையும் ஜக்கியப்படுத்தும் ஒரு அமைச்சா் அவரும் இதற்கு துணைபோகியுள்ளாா். அத்துடன் அவா் பிழையான செய்திகளையும் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளாா்.
அண்மையில் திருகோணமலை சன்முகா பெண்கள் பாடசாலையில் கூட அபாய அணிந்து சென்ற 5 முஸ்லீம் ஆசிரியைகளை அங்கும் இவ்வாறே தடுக்க்பபட்டாா்கள். அதன் பின்னா் அவ் ஆசிரியைகள் மனித உரிமை ஆணையகத்திற்குச் சென்று அதில் வெற்றி பெற்று அதிபருக்கு அதிகாரிக்கும் அவா்கள் அணியும் அபாயாவை கழற்றி சாரி அணிந்து வரச் சொல்ல அதிபருக்கோ பெற்றாா்களுக்கோ வேறு யாருக்கும் உரிமை கிடையாது என தீா்ப்பு வழங்கியுள்ளது. இன்றும் அங்கு அதே ஆசிரியாகள் அபாயா அணிந்து தாண் அந்தப் பாடசாலைக்குச் மீளச் செல்கின்றனா். என மேல் மாகாண ஆளுனா் அசாத் சாலி தெரிவித்தாா்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -