மருதமுனை ஹரீஷாவின் 'சொட்டும் மிச்சம் வைக்காமல்' கவிதை நூல் வெளியீட்டு விழா.


பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை ஹரீஷா எழுதிய 'சொட்டும் மிச்சம் வைக்காமல்' கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(07-04-2019)பி.ப.3.00 மணிக்கு மருதமுனை மருதூர்க்கனி பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
பிறை எப்.எம்.கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

கௌரவ அதிதிகளாக பேராசிரியர்களான செ.யோகராசா,றமீஸ் அப்துல்லா ஆகியோரும்,விஷேட அதிதிகளாக கவிஞர் சோலைக்கிளி,எழுத்தாளர் உமா வரதராஜன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஆசிரியரும்,ஊடகவியலாளரும்,விமர்சகருமான ஜெஸ்மி எம்.மூஸா நூல் நயவுரை நிகழ்த்தவுள்ளார்.ந}லின் முதல் பிரதியை சிரேஷ்ட சட்டத்தரணியும்,பதில் நீதிபதியுமான ஏ.எம்.பதுறுதீன் பெறவுள்ளார்.

விஷேட பிரதியை கல்முனை ஏ.எம்.எம்.இன்ஜினியரிங் கன்ஸ்ரக்ஷன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எம்.எம்.முஸம்மில்,சிறப்புப் பிரதியை மருதமுனை எவபெஸ்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச்.அஹமட் அஜ்மீர் ஆகியோரும் பெறவுள்ளனர்.

ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சினாஸ் நிகழ்வைத் தொகுத்து வழங்கவுள்ளார். தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனம் நூலை வெளியீடு செய்கின்றது.கவிஞர்கள்,எழுத்தாளர் இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -