கொழும்பில் உள்ள துருக்கி தூதரகத்தினாலும் ரிக்கா எனும் துருக்கி உதவும் நிறுவனமும் இணைந்து இலங்கையில் உள்ள ஆங்கில மொழி முலம் “துருக்கி உலகில் ஒரு பிராந்திய சக்தியை முன்நோக்கி வருகின்ற நாடு “ என்ற தலைப்பில் இக் கட்டுரைப்போட்டியொன்றை நடாத்தியது. நூற்றுக் கணக்கான கட்டுரைகளுள் 3 கட்டுரைகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டன.
அவர்களுக்கு பரிசளிக்கும் பைவவம் இன்று கொழும்பில் துருக்கி தூதரகத்தில் தூதுவர் துன்கா ஓக்கண்டரினால் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
முதலாம் இடம் நர்மாடா ஆனந்தக்குமார் டெயிலி நியுஸ் ஊடகவியலாளர்
இவருக்கு டெப் டொப்,மற்றும் புகைப்படக் கருவியொன்றும் வழங்கப்பட்டது.
இரண்டாம். இடம் என்.யு.அப்துல் ரசாக் உடையார், ஊடகவியலாளர் டெப்டொப் பரிசாக் வழங்கப்பட்டது.
முன்றாம் இடம் மொஹமட் அஸ்மி -களுத்துறை 1இலட்சம்ருபா பெறுமதியான புகைப்படக் கருவியொன்றும் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் செயலாளர் சாதீக் சிகானும் கலந்து கொண்டிருந்தனர்.