காரைதீவுப்பிரதேசத்திற்கு பூரண பாதுகாப்பு வழங்கவேண்டும்.!


பாதுகாப்புத்துறை உயரதிகாரியிடம் காரைதீவு தவிசாளர் வேண்டுகோள்!
காரைதீவு நிருபர் சகா-
குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற சாய்ந்தமருதுக்கிராமத்திற்கும் தற்கொலைப்படையங்கிகளும் ஏனைய உபகரணங்களும் சிக்கிய சம்மாந்துறைக்கிராமத்திற்கும் இடையிலுள்ள காரைதீவுதமிழ்க்கிராமத்திற்கு பூரணபாதுகாப்பு வழங்கவேண்டும் எனபாதுகாப்புத்துறைஉயரதிகாரியிடம் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூன்று பக்கமும் இஸ்லாமிய சகோதரர்களைக்கொண்ட சாய்ந்தமருது நிந்தவூர்சம்மாந்துறை ஆகிய 3 ஊர்களிலும் தற்சமயம் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகள் இடம்பெற்று ஊரடங்கு அமுலில் இருப்பதால் மத்தியிலுள்ள காரைதீவுக்கிராம மக்கள் பீதியுடனுள்ளனர். மக்கள்வீடுகளில் முடங்கியுள்ளனர்.
வானமும் தொடர்ந்த இருநாட்களாக மப்பும் மந்தாரமுமாக உள்ளது. அதுவேற பீதியை அதிகரித்தவண்ணமுள்ளது.
காரைதீவுக்கிழக்குப்பக்கம் கடலோரத்துடன் தொடர்புடைய கிராமம். அந்தப்பகுதியில் இனந்தெரியாதநபர்கள் அவ்வப்போது நடமாடுதவதாக தனக்குத்தகவல் கிடைத்துவருகிறது. எனவே கரையோரத்தில் பாதுகாப்பைப்பலப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே காரைதீவுக்குள் வியாபாரநடவடிக்கைகளில் இதுவைர ஈடுபட்டுவந்த பிறகிராமத்தவர்கள் கூவிவிற்பவர்கள் தற்காலிகமாக அதனை நிறுத்துமாறு கேட்டுள்ளார்.
காரைதீவு பிரதேசவைத்தியசாலை நிருவாகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க வைத்தியசாலைக்கு இராணுவப்பாதுகாப்புவழங்கப்படவேண்டும் எனக்கேட்டுள்ளார். அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத்தெரிகிறது.
காரைதீவுக்கிராமத்தினுள் இனந்தெரியாத நபர்கள் யாராவது உலாவினால் பொதுமக்கள் உடனடியாக தமக்கு அறியத்தருமாறு பொதுவான வேண்டுகோள்ஒன்றை விடுத்துள்ளார்.
காரைதீவிலுள்ள இராணுவமுகாம் வழமைக்கு மாறாக கூடுதலான படைவீரர்களோடு இருப்பதால் எத்தகைய சந்தர்ப்பத்தையும் கையாளமுடியுமென அவர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -