காத்தான்குடி வரலாற்றில் முதற் தடவையாக எலும்பு முறிவு சத்திர சிகிச்சை துறைக்கு Dr.Ahamed Nihaj தெரிவு செய்யப்பட்டு கடந்த வாரம் நடைபெற்ற MD- Orthopedics பகுதி 2 பரீட்சையில் சித்தி அடைந்து ஊருக்கும் மக்களுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார், இன்னும் இருவருட உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு பயிற்சிகளுக்கு பின்னர் consultant orthopedic surgeon ஆக சேவையாற்றவுள்ளார்.!
இவர் காத்தான்குடி அல்ஹிறா வித்தியாலயத்தில் தனது ஆரம்ப கல்வியையும், காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் உயர் கல்வியையும் , கொழும்பு பல்கலைக் கழகத்தில் தனது MBBS பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர், உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக 25ம் இடத்தை பெற்றுக்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.!
மேலும் இந்தியாவில் உள்ள தலை சிறந்த orthopedic surgery வைத்தியசாலை ஒன்றில் வழங்கப்படும் ஒரு மாத orthopedic fellowship இற்கு இலங்கையில் இருந்து முதலாவதாக தெரிவான வைத்தியராக இன்று ஒரு மாத விசேட பயிற்சிக்காக இந்தியா பயணமாகிறார்.
இவர் பல மருத்துவ ஆய்வுக்கட்டுரைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார். இவரது ஆய்வுகள் தென்னாபிரிக்கா, கனடா, இந்தியா போன்ற நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்குகளில் அறிமுகப்படுத்தப்பட்டு பலத்த வரவேற்பைப்பெற்றதும் விஷேட அம்சமாகும்..!
இவர் தனது அத்தனை வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் சிறந்த சமூக சிந்தனையுடன் சேவையாற்றும் ஒரு சமூக சேவையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.!
நிஹாஜ் இன்றைய மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாவார். வறுமையும் ஏனைய தடைகளும் கல்வி முன்னேற்றத்துக்கு ஒரு போதும் தடையாக அமையாது என்பதற்கு இவர் ஒரு வாழும் உதாரணமாகும்.