செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை



அப்துல்சலாம் யாசீம்-

சிவரார்த்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புழ்ழாஹ் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் அதிகளவில் இந்து மக்கள் வாழ்ந்து வரும் வேளையில் சிவராத்திரி தினத்தன்று அதிகம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு வருவது வழக்கமாகும்.
இதில் பெரியோர்கள் மாத்திரமின்றி பாடசாலை செல்லும் மாணவர்களும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு மறு நாள் பாடசாலை செல்ல முடியாத நிலை காணப்படும்.
இவ்விடயத்தை கவனத்தில் கொண்டு செவ்வாய் கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும், அன்றைய தினத்தை மற்றுமொரு நாட்களில் பாடசாலை நடாத்தவுள்ளதாகவும் ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -