வரவேற்புரையை நிகழ்த்திய மேமன்கவி நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்வுக்கான நினைவுப் பேருரையைப் பேராதனை பல்கலைக்கழ தமிழ்த்துறை விரிவுரையாளர் எம்.எம். ஜெயசீலன் அவர்கள் மலையகத்தில் பெரிய எழுத்துப் பாரம்பரியமும் சிறுவெளியீடுகளும் எனும் தலைப்பில் சிறப்பான ஒரு நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பட்ட உலக நாடுகளைச் சார்ந்த கவிஞர்களின் ஆங்கிலக் கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலான ஜிஃப்ரி ஹாஸனின் '' மூன்றாம் பாலினத்தின் நடனம்'' எனும் நூலுக்கும், 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஆய்வு நூல்களில் சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பட்ட ,வட-கிழக்கு பிரதேசத்தைச் சார்ந்த பழம்பெரும் பாடசாலைகளின் வரலாற்றைச் சொல்லும்முருகேசு பாக்கியநாதனின் கல்வி கண்திறந்த கோயில்கள்'' எனும் நூலுக்கும் துரைவிவிருதுகளை இலக்கியப் புரவலர் ஹாஸிம் ஒமர் வழங்கினார். முருகேசு பாக்கியநாதன்கனடாவில் வசிப்பதனால் அவருக்கான விருதினை அவரது மகன் பி. கெளரீஸன் பெற்றுக் கொண்டார்.
மு.பொன்னம்பலம் பாராளுமன்ற உறுப்பினர் மல்லிகைப்பு சந்தி திலகர், இரா சடகோபன், ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், எம். வாமதேவன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள்.
நன்றியுரையை ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் நிகழ்த்தினார்.

