சி.ஓ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரி இல்ல விளையாட்டு விளையாட்டுப் போட்டியில் டயமன் இல்லம் சம்பியன்

அகமட் எஸ். முகைடீன்-
நிந்தவூர் சி.ஒ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா - 2019 இறுதிநாள் நிகழ்வு ஓய்புபெற்ற வலய கல்விப் பணிப்பாளரும் இக்கல்லூரியின் அதிபருமான ஐ.எம். இஸ்ஸடீன் தலைமையில் நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை மாலை நிந்தவூர் பொது மைதானத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப், நிந்தவூர் பிரதேச சபை பதில் தவிசாளர் வை.எல். சுலைமாலெப்பை, சுங்க திணைக்களத்தின் ஓய்வுபெற்ற பிரதிப் பணிப்பாளரும் சி.ஒ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியின் ஸ்தாபக தலைவருமான ஓ.எல். சப்றி இஸ்மத், அப்துல்லாஹ் அல் சாயர் அரபுக் கல்லூரியின் தலைவர் சட்டத்தரணி எம்.சி. ஆதம்பாவா, மஃமூத் மகளிர் கல்லூரியின் ஓய்வுபெற்ற அதிபரும் சி.ஒ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியின் பிரதி அதிபருமான ஏ.எச்.ஏ. பசீர், மெஸ்ரோ அமைப்பின் தலைவரும் பதில் நீதவானுமாகிய சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். நசீல், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, நிந்தவூர் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், சி.ஓ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரி ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது சிவப்பு நிற றூபி, நீல நிற சபையர், பச்சை நிற டயமன் ஆகிய இல்லங்களுக்கிடையே நடைபெற்ற இவ்வில்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள் அணிவித்து வெற்றிக் கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.
விநோத உடைப்போட்டியில் மூன்றாமிடத்தை றூபி இல்லமும் இரண்டாம் இடத்தை டயமன் இல்லமும் முதலாமிடத்தை சபையா இல்லமும் பெற்றுக்கொண்டன.
இல்ல அலங்கரிப்பில் சபையர் மற்றும் டயமன் இல்லங்கள் இரண்டாம் இடத்தையும் முதலாமிடத்தை றூபி இல்லமும் பெற்றுக்கொண்டன.

உடற்பயிற்சி கண்காட்சியில் இரண்டாமிடத்தை டயமன் மற்றும் றூபி இல்ல அணியினரும் முதலாமிடத்தை சபையா இல்ல அணியினரும் பெற்றுக்கொண்டனர்.
சி.ஓ லெஸ்தகீர் சர்வதேச கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி – 2019 இன் சம்பியனாக 190.5 புள்ளிகளைப் பெற்ற டயமன் இல்லம் வெற்றிபெற்றது. மூன்றாமிடத்தை 138.5 புள்ளிகளைப் பெற்ற சபையர் இல்லமும் இரண்டாமிடத்தை 139 புள்ளிகளைப் பெற்ற றூபி இல்லமும் பெற்றுக்கொண்டன.


















































எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -