ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-
சர்வதேச மகளிர் தினத்தையிட்டு மட்டக்களப்பு- செங்கலடி தேசிய அபிருத்தி
வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு 14.03.2019 நடைபெற்றது.
வங்கியின் செங்கலடி கிளை அதிகாரி திருமதி ஜசிகா தேவானந்த்
தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் வலயக்கல்விப்பணிப்பாளர்
திருமதி சுபாஜினி சக்கரவர்த்தி சிறப்புரையாற்றினார்.
சமூக முன்னோடிகளான திருமதி தர்ஷினி சுந்தரேசன் மற்றும் திருமதி
காளிமுத்து சுபாஜினி ஆகியோர் விசேட உரையாற்றினர்.
சிறுகைத்தொழில் ஊக்குவிப்பிற்கான 'அரலிய பெண்கள் திட்டம்"
குறித்து விழிப்புணர்வூட்டும் நோக்குடன்
நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
சுயதொழில் முயற்சியின் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ள பெண்கள்
மூன்று பேர் இதன்போது நினைவுச்சின்னம் வழங்கி
கௌரவிக்கப்பட்டனர்.
வாழ்க்கையில் சேமிப்பு பழக்கம் இல்லாதிருந்தால் வாழ்க்கையையே
இழக்கநேரிடும் எனும் கருப்பொருளில் சிறப்பான நாடகம் ஒன்றை ஏறாவூர் தமிழ்
மகா வித்தியாலய மாணவர்கள் அரங்கேற்றினர்.