தீமைகளை தடுக்க முன்வராவிட்டால் அது என்றோவொருநாள் நம் வீட்டுக் கதவுகளைத் தட்டும் - எம்.எஸ்.எஸ். அமீர் அலி.


எச்.எம்.எம்.பர்ஸான்-
ற்போதைய சூழ்நிலையில் பெற்றோர்களுக்கு இருக்கின்ற சவால்கள் பிள்ளைகள் கல்வி கற்றார்களா என்பதைவிட போதையிலிருந்து பிள்ளைகளைக் காப்பாற்றிக் கொள்கின்ற போராட்டம்தான் இப்போது இருக்கின்ற மிகப்பெரிய சவாலாகும் என்று விவசாயஇ நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடி - தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியில் (28) புதிய மாடிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
பெற்றோர்களின் அந்தப் போராட்டத்திற்கு இஸ்லாமியப் போதனைகளைக் கற்றுக் கொடுக்கின்ற இவ்வாறான கல்விக் கூடங்கள் இல்லையென்று சொன்னால் நமது சமூகத்தில் வீதியோரங்களில் ஏராளாமான போதை வியாபாரிகளும் பாவனையாளர்களும் இருந்து கொண்டிருப்பார்கள்.

எனவே இந்தப் பிரதேசத்திலுள்ள அரபுக் கல்லூரிகள் மாணவர்களை நல்வழிப்படுத்த கணிசமான பங்களிப்புக்களை செய்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான அரபுக் கல்லூரிகளில் நீங்கள் உங்களது பிள்ளைகளை விட்டதினால் பிள்ளைகளை நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
இதிலே நாம் செய்த ஒரு பிழை இருக்கிறது ஒரு சமூகப் பிழையை விட்டதன் காரணத்தினால்தான் நாங்கள் இன்று இவ்வாறு கவலைப் படுகின்றோம் நாம் அதை கண்டு கொண்டு முளையிலேயே கிள்ளி எறியவதற்கான வேலைத்திட்டங்களை யாரும் செய்யவில்லை.
சமூகத்தில் ஒரு தீய நிகழ்வு நடைபெறப் போகிறது என்று சொன்னால் ஏதாவது ஒரு முறையில் அதைத் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அதை அந்த சமூகத்தில் இருப்பவர்கள் செய்யத் செய்யத்தவறினால் என்றோ ஒருநாள் அவர்களுடைய வீட்டுக் கதவுகளை அந்தத் தவறு வந்து தட்டும். அப்போதுதான் நாம் யோசிப்போம் ஆகா நாம் அன்று கண்டு கொள்ளாமலிருந்த நிகழ்வு இன்று எங்கள் வீட்டுக்கு துரத்தி வந்து விட்டதென்று. இதைவிடவும் வேறுவிதமான நிகழ்வுகளும் எதிர்காலத்திலே வரக் கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றது

அந்த நாட்களிலே போதை என்றால் கஞ்சாவைப் பற்றித்தான் அறிந்திருந்தோம் அதற்குப்பின் மதுபானத்தில் பலபல ரகங்களை அறிந்திருக்கின்றோம் அதற்குப்பிறகு குடு என்று அறிந்திருக்கின்றோம் இப்போது குளிசை என்று அறியப்படுகிறது இவைகள் எல்லாம் எங்களை துரத்திக்கொண்டு இருக்கின்றது. எனவே பெற்றோர்கள் பிள்ளைகள் விடயத்தில் கூடுதல் கவனமெடுத்து செயற்பட வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி, தியாவட்டவான் அரபா வித்தியாலய அதிபர் ஏ.எல்.இஸ்மாயில், காவத்தமுனை அர் ரஹ்மா விசேட தேவையுடையோர் பாடசாலையின் தலைவர் மெளலவி எஸ்.எச்.அரபாத் சஹ்வி, மற்றும் உலமாக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -