மூதூர் மக்களின் நீண்ட நாள் பிரச்சினையாக இருந்து வந்த மூதூர் வேதத்தீவு பாலம் கட்டுமான பணி சனிக் கிழமை (30) காலை வர்த்தகவாணிப கைத்தொழில் நீண்டகாலம் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியேற்றுதல் கூட்டுறவுத் துறை, தொழிற் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிசாத் பதியுதீன் அவர்களால் ஆரம்பிக்கப் பட உள்ளன.
இதணை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஃரூப் அவர்கள் நேரில் சென்று நேற்று (28) பார்வையிட்டர்.
இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூதூர் மத்திய குழு தலைவர் எம்.எம்.ஏ.சியான், மத்திய குழு செயலாளர் ஏ.எம். நுஸ்ரி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ். றிபாஸ் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் போன்றோர்களும் உடனிருந்தார்கள்.