சிலாவத்துறை மண் மீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக மன்னார் பிரதேசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!!


எ.எம்.றிசாத்- 
ன்னார் பிரதேச சபையின் 12வது அமர்வின் போது முசலி பிரதேசபைக்குட்பட்ட சிலாவத்துரையில் கடற்படையினரால் ஆக்கிரமிப்புக்குள்ளான காணியை விடுவித்து மக்களின் பாவனைக்கு கையளிக்கும் தீர்மானம் தவிசாளர் முஜாஹிர் அவர்களினால் கொண்டுவரப்பட்டு உறுப்பினர்களின் முடிவுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

தவிசாளரினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை 21சபை உறுப்பினர்களும் ஏகமனதாக அங்கிகரித்ததுடன் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தீர்மானம் எடுக்கப்பட்டு உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமர்வின் போது கலந்துரையாடப்பட்டது.

மேலும் இன மதத்துக்கு அப்பால் 21 நாட்களாக முசலி பிரதேசத்தில் இந்த போராட்டம் நடைபெற்றுவருகின்றது. இந்த முசலி பிரதேசத்தில் 32 கிராமங்களுக்கும் தலைநகராக சிலாவத்துறை நகர் காணப்படுகிறது இந்த நகரில் அமைந்துள்ள இந்த கடற்படை முகம் அகற்றப்படவேண்டிய தேவைப்பாடு உள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த போராட்டம் நடைபெற்றுவருகின்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்களுக்கு எமது பிரதேச மக்கள் சார்பாக மன்னார் பிரதேசபை முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும் முடிவுகள் எடுக்கப்பட்டது....

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -