விளையாட்டுக்கள் மூலம் சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்



விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கெளரவ காதர் மஸ்தான் உரை.


விளையாட்டுக்கள் தனிமனித ஆரோக்கியத்திற்கு மாத்திரமின்றி சமூக ஐக்கியத்திற்கும்,நல்லிணக்கத்திற்கும் உறுதுணையாக இருக்கின்றது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள் குடியேற்றம்,புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட இளைஞர்களின் விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் முகமாக தெரிவு செய்யப்பட்ட முப்பத்தெட்டு கழகங்களில் பதின்மூன்று கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வவுனியா மாவட்ட காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற பொழுதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது....
எமது பிராந்திய இளைஞர்களின் திறன்களும் ஆற்றல்களும் வெளிக்கொணரப்படுவதற்கு விளையாட்டுக்கள் களமமைத்து கொடுக்கின்றன,அந்த வெளிப்பாடுகள் மேம்படுவதற்கு ஊக்கமளிப்பது எமது பணியாக திகழ்கிறது.
சுமார் பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களை நாம் வழங்கும் அதேவேளை அதற்கு பிரதிபலனாக நீங்கள் எங்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சிறந்த அடைவுகளை,சாதனைகளை நிகழ்த்தி காட்ட வேண்டும் .அதை உங்களின் பிரதிநிதி என்ற வகையில் ஆவலோடு எதிர்பார்க்கின்றேன் எனவும் குறிப்பிட்டார்.
தெரிவு செய்யப்பட்ட முப்பத்தெட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்குவதற்கு கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் சுமார் பத்து இலட்சம் ரூபாய்களை ஒதுக்கீடு செய்திருந்தார்.

இந் நிகழ்வில் வவுனியா பிரதி நகரபிதா திரு.குமாரசுவாமி வவுனியா தெற்கு பிரதேச சபை பிரதி தவிசாளர் திரு.மகேந்திரன், நகரசபை உறுப்பினர் ஜனாப். பாயிஸ்,ஸ்ரீல.சு.கட்சியின் பிரதேச சபை மற்றும் நகரசபை வேட்பாளர்களான திரு.கஜன் ஆசிரியர்,திரு.ஷலிஸ்டன் மற்றும் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -