அட்டாளைச்சேனை ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமியா அமைப்பினால் மாபெரும் இரத்தான முகாம் 2019.02.23ஆந் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.
ஜம்இய்யத்துத் தர்பிய்யத்தில் இஸ்லாமியா நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இவ் இரத்தான முகாமில் பெருமளவான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியிருந்தனர்.
அமைப்பின் தலைவர் அஷ்ஷேஹ் எம்.ஏ.முபீன்(ஷஹ்வி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் லியாகத் அலி, சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.இஸ்மாயில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ்.ஏ.மஜீத் மற்றும் வைத்தியர் ஏ.சி.அப்துல் றசாக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவுக்கு பொறுப்பாகவுள்ள வைத்தியர் எச்.பீ.ஆர்.பிரசங்க தலைமையிலான குழுவினர் இந்நிகழ்வில் கலந்து தங்களது சேவையினை வழங்கியிருந்தனர்.
இப்பிராந்தியத்தில் கடந்த பல வருடங்களாக இவ்வமைப்பினால் தொடர்ச்சியாக இரத்ததான முகாம்களை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.