வீடு மற்றும் மலசல கூடம் அற்றோருக்கான காசோலைகள், விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு



எஸ்.அஷ்ரப்கான்-
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் வறுமைக் கோட்டின் கீழ் வீடு மற்றும் மலசல கூடமின்றி வாழ்ந்து வரும் மக்களுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வும் விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வும் நேற்று (24) பிற்பகல் 02.00 மணிக்கு ஏறாவூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வி.யூசுப் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதிஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆளுநராக பதவியேற்று முதன் முறையாக ஏறாவூருக்கு வருகை தந்திருந்தார்.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.சுபைரினால் வீடு மற்றும் மலசல கூடமின்றி இனங்காணப்பட்ட 54 பேர்களுக்கான இரண்டாம் கட்ட காசோலைகளை கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்தார். மற்றும் 14 விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் ஆளுநர் அவர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் என்.எம்.நௌபீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.அஸீஸ், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் என்.நெடுஞ்செழியன், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் நாகமணி கதிரவேல், ஏறாவூர்ப் பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான எம்.எஸ்.ஜௌபர், எஸ்.எம்.கமால்தீன், எம்.எம்.சாஜித் ஆகியோரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -