கிழக்கு ஆளுநரின் சவூதி அரேபிய விஜயத்தில் முக்கியஸ்தர்கள் சந்திப்பு..


ஊதி அரேபிய இளவரசர் "சஊத் பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சஊத்" அவர்களுக்கு சொந்தமான "Exelentia Arabia" நிறுவனத்தின் பிரதித்தலைவர் "Giovanni Zappia" அவர்களை கிழக்கு ஆளுநரும் முஸ்லீம் வேல்ர்ட் லீக்கின் உயர் சபை உறுப்பினர் "கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ்" அவர்களுக்கிடையிலான சந்திப்பு நேற்று இடம் பெற்றது.

இந் சந்திப்பில் சஊதி அரேபியாவிலும் , அதற்கு வெளியிலும் பல கோடி டொலர்களை முதலீடு செய்கின்ற மிகப் பெரிய நிறுவனமான "Exelentia Arabia" இலங்கையிலும் முதலீடு செய்வது தொடர்பாகவும், இலங்கையில் உள்ள தொழிற்சாலைகளில் முதலீடு செய்து பொருளாதார ரீதியில் இலங்கையை முன்னேற்றுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. பல பில்லியின் டொலர்கள் முதலீடு செய்து அமைக்கப்டும் புதிய நகரத்திற்கு பொறுப்பான இந் நிறுவனம் இலங்கையிலும் பாரிய முதலீடுகளை விரைவில் மேற்கொள்ள இவ்நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இச் சந்திப்பில் முஸ்லீம் வேல்ர்ட் லீக் கிழக்காசிய ஆலோசகர் கலாநிதி அஹமத் ஹமாத் ஜிலான் மற்றும் அஷ்ஷெய்க் அப்துல் காதர் மஷூர் மொளலானா அவர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -