வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த வேண்டும் - ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

க.கிஷாந்தன்-
யிரம் ரூபாவை நாளாந்த சம்பளமாக பெற்று தருவதாக கோரி தொழிலாளர்களின் அடிவயிற்றில் தொழிற்சங்களும், முதலாளிமார் சம்மேளமும் அடித்தது. இதனை ஞாபகப்படுத்தி இந்த நம்பிக்கை துரோக செயலை கண்டித்தும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை இன்றைய பொருளாதார நிலையையில் தொழிலாளர்களின் நிலையுணர்ந்து உயர்த்த அரசுக்கு அழுத்தம் பிரயோகித்து அட்டன் நகரில் ஜே.வி.பி மற்றும் அதன் தொழிற்சங்க பிரிவான அகில இலங்கை தோட்ட தொழிலாளர்கள் சங்கம் இணைந்து மாபெரும் ஆர்பாட்டம் ஒன்றை 03.03.2019 அன்று நடத்தினர்.
சுமார் 100ற்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சுலோகங்களை ஏந்தியவாறு, எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய சலுகைகளை உடனடியாக வழங்குமாறும், இதன்போது வழியுறுத்தியமை குறிப்பிடதக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -