இதன் முதல்கட்ட செயலமர்வு சம்மாந்துறை தொகுதி இளைஞர்களுக்கு நாளை (04) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு சம்மாந்துறை மஜீத் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இச்செயலமர்வில் சம்மாந்துறை, சென்றல் கேம்ப, சவளக்கடை, கொலணி, இறக்காமம், வரிப்பெத்தான்சேனை, வாங்காமம், மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு பிரதேசங்களைச் சேர்ந்த 1000 இளைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நசீல் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வளவாளர்களாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், கலாநிதி ஏ.எம்.பாசில், கலாநிதி ரவூப் செய்ன், உளவளத்துறை வைத்தியர் எம்.சறாப்டீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நாட்டின் முரண்பாட்டுச் சூழலில் இளைஞர்களின் வகிபாகம், போதையற்ற இளைய தலைமுறை எனும் பல்வேறு தலைப்புக்களில் விரிவுரைகள் நிகழ்த்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்முனை மற்றும் பொத்துவில் தொகுதி இளைஞர்களுக்கான செயலமர்வுகள் இம்மாதம் 9ம், 10ம் திகதிகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.நசீல் மேலும் தெரிவித்தார்.
