கிண்ணியா அப்துல் மஜீத் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி விழா கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் கோலாகலமாக இடம் பெற்றது.
பாடசாலை அதிபர் ஏ.எல்.எம்.நளீப் தலைமையில் இன்று (28) நடைபெற்ற இவ் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக துறை முகங்கள் மற்றும் கப்பற்றுரை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
பிரதியமைச்சரை பாடசாலை மாணவர்கள் இசை வாத்தியத்துடன் அமோக வரவேற்பளித்தார்கள்.
சபா,மர்வா, மினா என மூன்று இல்லங்கள் அழகுபடுத்தப்பட்டு அமைக்கப்பட்டிருந்தன.
மினா இல்லம் முதலாம் இடத்தையும் மர்வா , சபா இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்றது
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் பிரதியமைச்சரை கொண்ட குழுவினரால் வழங்கி கௌரவிக்கப்பட்டன
குறித்த பாடசாலையில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை, கா.பொ.தா சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து விசேட பெறுபேறுகளை பெற்ற மாணவ மாணவிகளும் இதன் போது பரிசில்கள் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
கலை, கலாசார , அணிநடை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி ஸீனதுல் முனவ்வரா நளீம், பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ், கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி, கல்வி உயரதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றார்கள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.