மீராவோடையில் இடம்பெறவுள்ள அபிவிருத்திப் பணிகளுக்கான முன்னெடுப்புக்கள் ஆரம்பம்.

எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மீராவோடையில் ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகளுக்கான முன்னெடுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கம்பெரிலிய வேலைத்திட்டத்தின் கீழ் விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடம், பாடசாலை வீதி, ரான்ஸ்போமர் வீதி ஆகிய இடங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
இதில் ரான்ஸ்போமர் வீதிக்கு வடிகானுடன் கூடிய கொங்கிரீட் இடுவதற்கு ரூபாய் பதினைந்து இலட்சமும், அமீர் அலி கேட்போர் கூட புனர்நிர்மானத்திற்கு ரூபாய் இருபது இலட்சமும், பாடசாலை வீதிக்கு கொங்கிரீட் இடுவதற்கு ரூபாய் இருபது இலட்சமும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ள இடங்களை பிரதேச செயலக உத்தியோகத்தர்களான தொழிநுட்ப உதவியாளர் எம்.ராஜ், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.பாயிஸ் மற்றும் மீராவோடை மேற்கு வட்டாரக் குழுத் தலைவரும் அமைச்சர் அமீர் அலி அவர்களின் இணைப்பாளருமான ஐ.எம்.றிஸ்வின் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆகியோர்கள் குறித்த இடங்களை இன்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது .



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -