கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் கீழுள்ள வைத்தியசாலைகளுக்கு 30 வைத்தியர்கள் நியமனம்.

அகமட் எஸ். முகைடீன்-
ல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் கீழுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுவதற்கு நியமனம் பெற்ற 30 வைத்தியர்களுக்குமான கடமை இணைப்பு கடிதங்கள் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.எல். அலாவுத்தீனால் இன்று (1) வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டன.
பயிற்சி வைத்தியர் நியமனத்தை நிறைவு செய்த வைத்தியர்களுக்கு அண்மையில் சுகாதார அமைச்சு வழங்கிய நிரந்தர நியமனத்தின்போது கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் கீழுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றுவதற்கு நியமிக்கப்பட்ட வைத்தியர்களுக்கே மேற்படி கடமை இணைப்புக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
சம்மாந்துறை, நிந்தவூர், திருக்கோவில் மற்றும் பொத்துவில் ஆதார வைத்தியசாலைகளுக்கு முறையே 9, 6, 1, 8 வைத்தியர்களும் இறக்காமம், தீகவாபி, கோமாரி, சேனைக்குடியிருப்பு, மத்தியமுகாம் பிராந்திய வைத்தியசாலைகள் மற்றும் பிராந்திய மார்புநோய் தடுப்பு பிரிவு சம்மாந்துறை ஆகியவற்றிற்கு ஒவ்வொரு வைத்தியரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்முனை பிராந்தியத்திற்கு அதிகளவான வைத்தியர்கள் இம்முறை நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -