கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள், (15) வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று, கல்வியமைச்சின் ஆசிரியர் கல்வி தலைமை ஆணையாளர் கே.எம்.எச். பண்டார தெரிவித்துள்ளார்.
2016 - 2017 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி எய்திய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
தபால் மூலமும், இணையத்தளம் மூலமாகவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
கல்வியியல் கல்லூரிகளுக்கு, இம்முறை புதிதாக எட்டாயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக, ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட மட்டத்தில் பெறப்பட்டுள்ள ஆகக்கூடிய ஆற்றல்களுக்கு அமைவாக, மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். பாடசாலையிலுள்ள வெற்றிடங்களைக் கவனத்திற் கொண்டு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும், கல்வியமைச்சின் ஆசிரியர் கல்வித் தலைமை ஆணையாளர் கே.எம்;.எச். பண்டார குறிப்பிட்டுள்ளார்.
ஆகக் கூடுதலானோர் ஆரம்பப்வ் பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.