வத்தளை ஹுணுப்பிட்டிய கவிதாயினி ரிம்ஸா டீன் எழுதிய " மொழிபெயர்க்கப்படாத மெளனம் "கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு பிரான்ஸ் தமிழ்நெஞ்சம் சஞ்சிகை ஆசிரியர் திரு.அமீன் தலைமையில் ஹுணுப்பிட்டிய ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு அரச கருமமொழிகள் சமூக முன்னேற்ற இந்து சமய விவகார அமச்சருமான கெளரவ மனோ கணேசன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும் முன்னால் மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி ஜெமீல் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நூல் வெளியீட்டின் போது புரவலர் ஹாசீம் உமர் முதற்பிரதியை பிரதம அதிதி கெளரவ மனோ கணேசன் மற்றும் பிரான்ஸ் தமிழ்நெஞ்சம் அமீன் ஆகியோரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
கவிஞர் மேமன் கவி மற்றும் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் ஆகியோரால்" மொழிபெயர்க்கப்படாத மெளனம் "நூலின் ஆய்வுரை நிகழ்த்தப்பட்டதுடன் மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர் பாத்திமா ஷப்ரினா நசீர் கருத்துரையாற்றினார்.
இந்நிகழ்வில் ஈழத்து எழுத்தாளர்கள், கவிஞர்கள், வெளிநாட்டு கவிஞர்கள், அதிதிகள் என பலர் கலந்துகொண்டு சிற்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது..