கிண்ணியாவில் இயங்கி வரும் அல் ஹிக்மா பவுண்டேசன் நிறுவன ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ஆறு மாத கால தையல் பயிற்சி பாடநெறியை நிறைவு செய்த பெண்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் கண்காட்சியும் நேற்று (31) கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நிறுவனத்தின் தலைவர் மௌலவி அஷ்ஷெய்க் இபாதுல்லா தலைமையில் இடம் பெற்றது.
லண்டன் நாட்டின் எபில் பெனிக் நிறுவன நிதி நடவடிக்கைகள் ஊடாக நடாத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் குறித்த செயற் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து 63 பெண்கள் தையல் பயிற்சி நெறி நிறைவு பெற்றமைக்கான சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
ஆடை உற்பத்தி கண்காட்சியும் இதன் போது இடம் பெற்றது. தையல் பயிற்சி பெற்ற பெண்களால் குறித்த ஆடை உற்பத்தி பொருட்கள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹரூப் உட்பட லண்டன் நாட்டின் எபில் பெனிக் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் மலிக் வசீம், கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம்,பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, நகர சபை உறுப்பினர் எம்.எம்.நிவாஸ்,பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் பைரூஸ்,சமூக சேவை உத்தியோகத்தர் ஹபீபுள்ளா ,பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.