எவராகவும் இருக்கட்டும் மனித உயிர்களைக் காவுகொள்ள உரிமையில்லை யாருக்கும்!
அடுத்தவன் உயிரைப் பலியெடுக்க இஸ்லாமிய மார்க்கத்தில் என்றுமே இல்லை அனுமதி!
நாலுபேர் சேர்ந்து போராடி வேட்டையாடப்படும் படைவீரனும் மனித ஜாதி தான்!
படைவீரனால் நசுக்கப்படும் அப்பாவி குழந்தைகள் சிறுவர் இளைஞர் முதியோர் பெண்கள் இவர்களும் மனித ஜாதி தான்!
இலையொன்றில் புழுவரித்தால் மரத்தை வெட்டுவதில்லை கண்ணுக்குள் தூசு விழுந்தால் கண்ணைப் பிடுங்குவதில்லை நாலு பேர் கோசமெழுப்பினால் மட்டும் நாலாயிரம் பேரைக் காவுகொள்வது எந்த மத நியாயமப்பா!
கொல்பவன் யாராகினும் பேதமின்றி கண்டிக்கிறோம் நாம் படைவீரனைக் கொன்றவனும் கொல்லப்படவேண்டியவனே அப்பாவிகளைக் கொன்றவனும் கொல்லப்படவேண்டியவனே!
காவுகொள்ளப்படும் படைவீரனை அனுதாபமாய் பார்க்கும் மனித உறவுகள் காவுகொள்ளப்படும் அப்பாவிகளை அனுதாபமாய் பார்க்க மறுப்பதேன்?
உரிமைகள் மறுக்கப்படுவதையும் உண்மைகள் மறைக்கப்படுவதையும் ஆட்சியதிகாரத்துக்கும் பதவிக்கும் படைவீரனாகட்டும் அப்பாவியாகட்டும் பலிக்கடாவாக்கப்படும் ஈனச்செயலை கண்டுக்காமல் விடுவதும் கண்டிக்காமல் விடுவதும் மனிதப் பண்பாகுமா உறவுகளே!
காவுகொள்ளலை கண்டிப்போம் காலக்கொடுமையைத் தடுப்போம் காருண்யம் வளர்த்திடுவோம்! @D N A