கிண்ணியா விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய இன்று(01) துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள் சம்மந்தப்பட்ட அரச உயரதிகாருகளுடன் களத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு விவசாய சங்கங்களுடன் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.
நீர் வடிந்தோடக்கூடிய ஹாடி (ரெகுலேட்டர்) அமைக்க வேண்டும் இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கிண்ணியா பீங்கான் உடஞ்சாரு, புளியடிக் குடா, வன்னியனார் மடு, பக்கிரான் வெட்டை, கூலடி வெட்டை போன்ற விவசாய நிலங்களில் ஹாடி அமைப்பதனால் பல விவசாய செய்கைகளை மேற்கொள்ள முடியும் என விவசாய சம்மேளன உறுப்பினர்கள் பிரதியமைச்சரிடத்தில் தெரிவித்தனர்.
தனது நிதி ஒதுக்கீட்டில் உடனடியாக ஐந்து ரெகுலோட்டர்களையும் செய்து தருவதாக பிரதியமைச்சர் விவசாய சங்கங்களிடம் தெரிவித்தார். இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளொ மேற்கொள்ளுமாறும் துரிதமாக செயற்படுமாறும் திருகோணமலை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் ஏ.எல்.ஜௌபருக்கு பணிப்புரை வழங்கினார்.
இக் கள விஜயத்தில் கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி,மாவட்ட நீர்ப்பாசன பணிமனையின் பணிப்பாளர் ஏ.எல்.ஜௌபர், தொழில் நுட்ப உதவியாளர் சிராஜ் உட்பட விவசாய சங்கங்களின் உறுப்பினர்கள் என பலர் பங்கேற்றனர்.