திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்களால் இன்று (16) சனிக் கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.
பிரதியமைச்சரை பாடசாலை சமூகம், பொது மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
கிண்ணியா பிரதேச செயலக பிரிவின் வானல புஹாரி வித்தியாலயத்துக்கான சுற்று மதில்,ஆயிலடி முஸ்லீம் கொலனி கொங்ரீட் வீதிகள்,கற்குழி கொங்ரீட் வீதி,மகாமார் அலிஹார் பாடசாலைக்கான மைதான பார்வையாளர் அரங்கு,பூவரசந்தீவு கொங்ரீட் வீதிகள் உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் கொங்ரீட் வீதிகள் என்பன மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
பல மில்லியன்கள் ரூபா செலவில் அமுல்படுத்தப்பட்ட இக் குறித்த அபிவிருத்திப் பணிகள் கிராமிய அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் நோக்கில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்களாகும்.
மக்கள் பிரச்சினைகளை ஆராய மக்கள் சந்திப்புப் குறித்த ஒவ்வொரு பகுதிகளிலும் இடம் பெற்றது.
குறித்த அபிவிருத்தி திட்டங்கள் கம்பரெலிய, கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி விசேட நிகழ்ச்சித் திட்டம், நீண்டகாலம் இடம் பெயர்ந்தோரை மீள்குடியேற்றுவதற்கான திட்ட முகாமைத்துவ அலகு உள்ளிட்ட திட்டங்கள் ஊடாக பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் நடை முறைப்படுத்தப்பட்டன.
அபிவிருத்தி நிகழ்வுகளை திறந்து வைத்து இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் அவர்கள்
நிதி ஒதுக்கீடுகளை பழ வழிகள் ஊடாக பெற்று அபிவிருத்திக்காகவே செய்து வருகிறேன். கிராமிய நலன் கருதி அபிவிருத்தி நோக்கில் தனது முன்னெடுப்புக்களை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் தொடர்ச்சியான கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் மக்களுக்காக நடை முறைப்படுத்தப்படும் என்றார்.
இவ் புதிய அபிவிருத்தி நிகழ்வுகளை மக்களிடம் கையளிக்கும் வைபவத்தில் பிரதியமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா, பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஈ.எல்.அனீஸ்,கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.ஐ.நிஸார்தீன் முஹம்மட் , பிரதேச சபை உறுப்பினர்கள்,வட்டார வேட்பாளர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ,கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.