இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் மாவடிப்பள்ளி மையவாடியினை ஒளியூட்ட நவீன எல்.ஈ.டி மின்விளக்குகள்

அகமட் எஸ். முகைடீன்-
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மாவடிப்பள்ளி றஹ்மானிய பள்ளிவாசல் மையவாடியினை ஒளியூட்டுவதற்கு ஒரு இலட்சத்தி இருபதாயிரம் ரூபா பெறுமதியான நவீன எல்.ஈ.டி மின்விளக்குகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா குறித்த நவீன மின்விளக்குத் தொகுதியினை மாவடிப்பள்ளி ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவசரிடம் கையளித்தார்.
இதன்போது காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். றனீஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாவடிப்பள்ளி அமைப்பாளர் மௌலவி எம்.ஐ.எம். றியால் உள்ளிட்ட மாவடிப்பள்ளி ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர், மாவடிப்பள்ளி றஹ்மானிய பள்ளிவாசல் நிர்hவக சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பிரசன்னமாகியிருந்தனர்.

இரவு நேரங்களில் குறித்த மையவாடியில் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதில் பிரதேசவாசிகள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை தொடர்பில் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் றனீஸ் இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் கவனத்திற்கு கொண்டுவந்ததனைத் தொடர்ந்து குறித்த நவீன எல்.ஈ.டி மின்விளக்குகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -