கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சைக்கான (2019) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப்படிவங்கள் இம்மாதம் 25 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்கள், தமது பாடசாலைகள் மூலமாக இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும். தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தங்களது பரீட்சைக்கான விண்ணப்பப்படிவங்களை, பரீட்சைத் திணைக்களத்தின்
www.doenets.lk
எனும் இணையளத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
அத்துடன், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில், தங்களது விண்ணப்பப்படிவங்களை பதிவுத் தபாலில் அனுப்பிவைக்க வேண்டுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இப் பரீட்சைக்கான விண்ணப்பிக்கும் திகதி, எந்தவொரு காரணத்திற்காகவும் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் பரீட்சைத் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.