காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய வழக்கில் ஹோமாகம நீதிமன்றத்தினால் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த தண்டனையை 5 வருடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு ஹோமாகம நீதிமன்றம் நேற்று (9) உத்தரவிட்டுள்ளது.
சந்தியா எக்னெலிகொட விடயத்தில் தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தேரருடைய வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனு நேற்று ஹோமாகம நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்தியதற்காக ஞானசார தேரர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும், நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவிக்கப்படும் மற்றுமொரு வழக்கின்படி, ஞானசார தேரர் தொடர்ந்தும் சிறைத் தண்டனை அனுபவித்து வருவதாக சகோதர தேசிய ஊடகமொன்று மேலும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -