வரவேற்புரையை உபாலி லீலாரட்ன நிகழ்த்தினார்.
பரிசு பெற்ற நூல்களின் தெரிவை சிங்கள எழுத்தாளர் அனுரசிறி ஹெட்டிகே அறிவித்தார். இந்த நிகழ்வில் பேராசிரியர் குசுமா கருணரத்தன. மேமன்கவி ஆகியோர் சிறப்புரைகள் ஆற்றினார்கள்.
இவ்விழாவில் 2018 ஆம் நடத்த போட்டியில் தெரிவுச் செய்யப்பட்ட சிங்கள மொழி நூல்களுடன், தமிழில் சிறந்த நாவலாக தெரிவுச் செய்யப்பட்ட மன்னார் எஸ்.ஏ. உதயனின் '' அலுவாக்கரை'' சிறந்த சிறுகதைத் தொகுதியாக செய்யப்பட்ட தங்கராசா செல்வகுமாரின் ''நாட்குறிப்பு'' சிறந்த கவிதைத் தொகுப்பாக செய்யப்பட்ட சப்னா செய்னுல் ஆப்தீனின் '' சமுத்ராவும் அவள் இசைக்கும் புல்லாங்குழலும்'' ஆகிய நூல்களுக்கான விருதுகளையும் ,பணப்பரிசிகளையும். சான்றிதழ்களையும் சிறிசுமன கொடகே-நந்தா கொடகே தம்பதியினரும், இலக்கியப்புரவலர் ஹாசிம் ஒமர் அவர்களும் இணைந்து வழங்கினார்கள். சிங்களத்திலும் தமிழிலும் ஹேமசந்திர பதிரன நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.