கல்முனை பிரதேசத்தில் பொருத்தப்பட்ட நவீன ஒன்லைன் தொழில்நுட்ப எல்.ஈ.டி தெருமின்விளக்கு தொகுதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

அகமட் எஸ். முகைடீன்-
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் அதிரடி நடவடிக்கையினால் தென் கொரிய நாட்டின் பல்தேசிய கம்பனியான எம்.பி.ஜி குறூப் நிறுவனத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்டு கல்முனை பிரதான வீதியில் பொருத்தப்பட்ட நவீன ஒன்லைன் தொழில்நுட்ப எல்.ஈ.டி தெருமின்விளக்கு தொகுதி மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு இன்று (10) வியாழக்கிழமை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்; மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பின் பேரில் தென் கொரிய நாட்டின் எம்.பி.ஜி குறூப் நிறுவனத்தின் பிரதித் தலைவி ஹென் யூஜின் குறித்த நவீன தெருமின்விளக்கு தொகுதியினை ஒளியூட்டி மக்கள் பாவனைக்கு கையளித்தார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரின் பொதுசன தொடர்புகள் அதிகாரி எம்.எஸ். அலிகான் ஸாபி, இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, கல்முனை மாநகர பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஸ் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் போராளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
தென் கொரிய நாட்டின் பல்தேசிய கம்பனியான எம்.பி.ஜி குறூப் நிறுவனத்தினால் கல்முனை மாநகர சபைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட 31 இலட்சம் ரூபா பெறுமதியான நவீன ஒன்லைன் தொழில்நுட்ப எல்.ஈ.டி தெருமின்விளக்குகள் மிகக் குறைந்த மின் நுகர்வினைக் கொண்டதாகவும் அங்கீகரிக்கப்பட்டவர்களின் செல்லிடத் தொலைபேசி ஊடாக இதன் இயக்கப்பாடு மற்றும் பிரகாசத்தின் அளவினை கூட்டி குறைத்தல் போhன்றவற்றை செயற்படுத்தக் கூடிய நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வகையான தெருமின்விளக்குகள் இலங்கையில் முதன் முதலாக கல்முனை நகரில் பொருத்தப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -