கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கல்முனை முதல்வர் றகீப் வாழ்த்து


அஸ்லம் எஸ்.மௌலானா-
கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றுள்ள கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் வாழ்த்துத் தெரித்துள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் முதல்வர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
பிராந்திய அபிவிருத்திக்கு உதாரண புருஷராகத் திகழ்கின்ற தாங்கள், கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதானது இம்மாகாணத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு வழிவகுக்கும் என்று நான் திடமாக நம்புகின்றேன்.
பல்லின சமூகங்கள் வாழ்கின்ற நமது கிழக்கு மாகாணத்தில் இனங்களிடையே புரிந்துணர்வின்மையும் சந்தேகங்களும் வலுப்பெற்றிருக்கின்ற இன்றைய சூழலில் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கப்பால் சேவையாற்றக் கூடிய மனப்பாங்கையும் ஆற்றலையும் கொண்டிருக்கின்ற நீங்கள், அத்தகைய சவால்களை முறியடித்து, இம்மாகாணத்தை முன்னேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
பொருளாதார ரீதியிலும் கல்வித்துறையிலும் பின்னடைவான நிலையில் காணப்படுகின்ற எமது கிழக்கு மாகாணத்தை அத்துறைகளில் முன்னேற்ற வேண்டியிருப்பதுடன் அனைத்து பிரதேசங்களினதும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மக்களின் வாழ்வொழுங்கையும் கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பை சுமந்துள்ள நீங்கள், உங்களுடைய நீண்ட கால அரசியல் அனுபவம், ஆற்றல்களைக் கொண்டு அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள் என நம்புகின்றேன்.
மேலும், மாகாண நிர்வாகத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களின் பரிபாலனம் வருவதனால் அவற்றின் வளங்கள் மற்றும் ஆளணி போன்றவற்றை அதிகரிப்பதற்கும் அவை எதிர்நோக்குகின்ற பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கும் உங்கள் பதவிக் காலத்தில் தீர்வுகள் காண்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பீர்கள் என நம்புவதுடன் அவற்றுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க நாம் தயாராகவிருக்கிறோம் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அந்த வகையில் முக்கியமான ஒரு கால கட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றுள்ள தங்களுக்கு எனது தனிப்பட்டதும் கல்முனை மாநகர வாழ் மக்களினதும் சார்பாக மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

உங்கள் ஊடாக கிழக்கு மண் சுபீட்சமடைய உங்களது உடல், உள தைரியமும் சக்தியும் நீடித்து நிலைபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -