திருக்கோவில் பிரதேசசெயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவை அதிகாரியான கந்தவனம் சதிசேகரன்(சதீஸ்) நேற்றுமுதல் நியமிக்கப்பட்டுள்ளார்.நேற்று அவர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் ஏலவே முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலகத்தில் உதவி பிரதேச செயலாளராகக் கடமையாற்றியிருந்தார்.
அவர் அங்கிருந்து இடமாற்றம்பெற்று திருக்கோவில் பிரதேசசெயலகத்தில் வெற்றிடமாகவிருந்த உதவி பிரதேச செயலாளர் பதவிக்கு நியமிக்ப்பட்டுள்ளார்.திருக்கோவில் பிரதேசசெயலகத்தின் உதவி பிரதேச செயலாளராக முன்னரிருந்த சீ.ஜெயருபன் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.. பின்னர் அவர் கடந்த மாதம் நோய்வாய்ப்பட்டு மரணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.அந்த இடத்திற்கு அட்டாளைச்சேனை உதவிபிரதேச செயலாளராகவிருந்த இலங்கை நிருவாக சேவை அதிகாரியான ஜே.அதிசயராஜ் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை நிருவாகசேவை அதிகாரியான திரு சதீஸ் காரைதீவைச்சேர்ந்தவர். திருக்கோவில் பிரதேச செயலாளராகவுள்ள சிவ . ஜெகராஜனும் காரைதீவைச்சேர்ந்தவராவார்.