கல்முனையைச் சேர்ந்த . இப்றாலெப்பைநெய்னா முஹம்மத் அவர்கள் பாரம்பரிய மேடை நாடக கலைக்காக தனது 2018ம் ஆண்டின் அரச கலாபூஷ விருதினை பெற்றுகொண்டார்.கடந்த (29) கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் வைத்து இவ் விருது வழங்கப்பட்டது.
இப்றாலெவ்வை பாத்தும்மா தம்பதிகளின் புதல்வாரன 1942இல் கல்முனைக்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இப்ராலெப்பை நெய்னாமுஹம்மது அவர்கள் சிறுவயதிலிருந்தே கலைத்துறையில் ஆர்வமிக்க ஒருவராகத்திகழ்ந்தார். கல்முனை அல் பஹ்ரியா வித்தியாலயத்தியாலயம் கல்முனை சாஹிறா கல்லூரிகளின் பழைய மாணவரான இவர் தனது பாடசாலைபருவத்தில் சமூக சேவைகள் இஸ்லாமிய கலைகளில் ஈடுபட்டதுடன் தனது ஊரைச்சேர்ந்த இளைஞர்களின் பங்களிப்புடன் முஸ்லிம் பொது நல சேவா சனசமூக நிலையம் என்ற சங்கத்தை ஆரம்பித்து தலைவராக பதவி வகித்ததுடன் அதனூடாக 1962ல் இஸ்லாமிய அரச வரலாற்று நாடகமான அக்பர் எனும் சரித்திர நாடகத்தையும் மேடையேற்றி அதில் கதாநாயகனாகவும் நடித்து மக்களின் பாராட்டுக்களையும் பெற்றார். மேலும் 1970ல் ஹாதீம் 1971ல் அனாதைப் பிள்ளை 1972ல் சுயனலக்காரனின் சூழ்ச்சி1973ல் என்னடிபுள்ள ஆகிய நகைச் சுவை நாடகங்களிலும் கதாநாயகனாக நடித்ததோடு மீண்டும்1974ல் பாரசீகபேரழகி எனும் இஸ்லாமிய அரசவரலாற்று நடகத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மனங்களை வென்றார். இந் நாடகங்களை பாடசாலையளிலும் கல்முனை கடற்கரைப்பள்ளி கொடியேற்ற விழாவிலும் அரங்கேற்றம் செய்து கிராமிய நாடகத்துறைக்கு அளப்பரியசேவைகள் புரிந்துள்ளார்.
மேலும் சீனடி,சிலம்படி, தனிப்பாடல், கோஸ்டிப்பாடல் ,போன்ற போட்டிகளில் பங்குபற்றி தனக்கென இடத்தைப் பெற்றுவிளங்கினார். கவிதைகளை வரைந்து அதனைபாடல் வரிகளாகப்பாடும் ஆற்றல் கொண்டவர்.
1989ல் சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டு பல சமூகசேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றார் முன்மாதிரி முதியோர் சங்கம் சிவில் பாதுகாப்பு குழு,கிராமசக்திக் குழு ஆகியவற்றின் தலைவராகவும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளராகவும் கல்முனை கலாசார அதிகார சபையின் உறுப்பினராகவும் செயற்பட்டு மக்களின் பொருளாதார சமூக கலாசார மேம்பாட்டிற்காக உழைத்து வருகின்றார்.
அத்துடன் 2014ஆம் ஆண்டில் கல்முனை பிரதேசத்தின் சிறந்த சிரேஷ்டபிரஜையாக தெரிவாகி கௌரவிக்கப்பட்டதுடன் 2016ஆம் ஆண்டில் பிரதேச கலாசார விழாவில் கிராமியக்கலைத் துறைக்கு ஆற்றிய சேவைகளை பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.