கிழக்கு ஆளுநரை இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கொழும்பில் சந்திப்பு.


அகமட் எஸ். முகைடீன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸூக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (16) புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் வெளிமாவட்டங்களில் கடமையாற்றுவதனால் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்ற இராஜாங்க அமைச்சர் ஹரீஸ், அவ்வாசிரியர்களுக்கான நிரந்தரத் தீர்வை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதற்கமைவாக இடாற்றம் கோரியுள்ள நீண்ட காலமாக வெளிமாவட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் நிரந்தரத் தீர்வை வழங்குவதாகவும் குறிப்பாக அம்பாறை மாவட்ட ஆசிரியர்களை அவர்களுடைய சொந்த வலயங்களில் கடமையாற்றுவதற்கு ஏதுவாக இடமாற்றங்களை வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸிடம் ஆளுநர் உறுதியளித்துள்ளாhர். அவ்வாறு இடமாற்றங்களை வழங்கும்போது ஏற்படும் வெற்றிடங்களுக்கு வெற்றிடம் நிலவும் பிரதேசத்தைச் சேர்ந்த புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அம்பாறையில் குறிப்பாக ஒலுவில் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 35 ஏக்கர் காணியினை அரசாங்க அதிபர் வன இலாக திணைக்களத்திற்கு இன்று வழங்கவுள்ளமை தொடர்பில் ஆளுநரிடம் எடுத்துக் கூறியமைக்கு அமைவாக உடனடியாக அதனை நிறுத்துமாறு அரசாங்க அதிபருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் அம்பாறையில் உள்ள காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூட்டம் ஒன்றை அம்பாறையில் கூட்டவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இராஜாங்க அமைச்சரின் வேண்டுகோளுக்கமைவாக கல்முனை தொகுதியில் முதற்கட்டமாக மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி மற்றும் கல்முனை மஃமூத் மகளீர் கல்லூரி ஆகியவற்றை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு ஆளுநர் அங்கீகாரம் அளித்துள்ளார். பொத்துவில் மத்திய கல்லூரியினை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு ஏற்கனவே அங்கீகாரமளிக்கப்பட்டு மத்திய கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சும் கிழக்கு மாகாண சபையும் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது சம்பந்தமாகவும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு கிழக்கு மாகாண இளைஞர், யுவதிகளுக்கு மாகாண சபையிலுள்ள வெற்றிடங்களுக்கு ஏற்ப தொழில்வாய்ப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சரிடம் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

விஷேடமாக கிழக்கு மாகாண மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சும் கிழக்கு மாகாண சபையும் இணைந்து விரைவாக மேற்கொள்வதென இச்சந்திப்பின்போது தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -