இலஞ்சம் பெற்ற அதிபர் ஹொரவப்பொத்தானையில் கைது


அப்துல்சலாம் யாசீம்-

ஹொரவ்பொத்தான றுவன் வெலி மத்திய மஹா வித்தியாலயதின் அதிபர் ஐயாயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று (31) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பாடசாலையில் அதிபராக கடமையாற்றி வரும் அனுராதபுரம் எப்பாவல பகுதியைச் சேர்ந்த எம். பீ. எம். டி.பண்டார (58வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது ஆறாம் ஆண்டு படிக்கக்கூடிய பிள்ளையை இப்பாடசாலையில் சேர்ப்பதற்காக வேண்டி 5000 ரூபாய் பணத்தை கேட்டபோது இவர் 1954 இனம் இலக்கத்திற்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியதை அடுத்து கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்துள்ளார்.

இம் முறைப்பாட்டையடுத்து இன்று 5000 ரூபாய் பணத்தை மாணவரை சேர்ப்பதற்காக அதிபரிடம் கொடுத்தபோது அதிபர் அப்பணத்தை மேசை லாச்சிக்குள் வைத்தவேளை இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


கைது செய்யப்பட்ட அதிபரை இன்று கெப்பிட்டிகொல்லாவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -