-பைசல் காசிம் நடவடிக்கை-
இறக்காமம்,குடுவில் அல்-ஹிரா வித்தியாலயத்துக்குத் தேவையான நிரந்தரக் கட்டட வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நடவடிக்கை எடுத்துள்ளார்.இந்தப் பாடசாலையில் ஒன்பதாம் ஆண்டு வரை கற்பிக்கப்படுகின்றது.கட்டட வசதிகள் இல்லாததால் மாணவர்கள் ஓலை குடிசைகளில் கல்வி நடவடிக்கைகளைத் தொடரும் அவல நிலை இங்குள்ளது.
பாடசாலை நிர்வாகத்தின் அழைப்பை ஏற்று பைசல் காசிம் கடந்த ஞாயிற்று கிழமை [20.01.2019] அங்கு சென்று பார்வையிட்டார்.அதன்போது அங்குள்ள குறைகளை கண்டறிந்த இராஜாங்க அமைச்சர் தேவையான கட்டட வசதியையும் ஏனைய தேவைகளையும் வழங்குவதாக உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்படி பாடசாலைக்கு நிரந்தர கட்டடத்தை அமைத்துக் கொடுக்கும் நடவடிக்கையில் பைசல் காசிம் இப்போது ஈடுபட்டுள்ளார்.மேலும்,அப்பிரதேச மக்களின் சுகாதார தேவைகளை நிறைவேற்றுவதற்கும் உறுதியளித்துள்ளார்.