ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின் நாட்டின் நீதித்துறையை புகழ்ந்து பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை கோருவதுஆச்சர்யமாக உள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் குறிப்பிட்டதாவது,நாட்டின் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதாக மிக அண்மையில் புகழ்ந்துகூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தற்போது யுத்த குற்றம்தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்கின்றார்கள். இந்தநாட்டின் நீதித்துறை மீது தமக்கு நம்பிக்கை உள்ளது என கூறிவிட்டு ஏன் இன்றுஇவர்கள் சர்வதேச விசாரணைகளை கோருகின்றனர்.
இவர்கள் இவ்வாறு கோருவதன் பின்னனியில் நாட்டின் நீதித்துறை மீதானநம்பிக்கையை தாண்டி வேறு எதோ ஒரு விடயம் இருக்க வேண்டும். நாட்டில்அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண நாட்டிற்குள் உள்ள சுயாதீன நீதி மன்றத்தில்நியாயம் கோரிய இவர்கள் வேறு விடயங்களையும் நாட்டிற்குள்ளேயேதீர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -