இஸ்லாமபாத் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

அகமட் எஸ். முகைடீன்-
ள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் இஸ்லாமபாத் பிரதேசத்தின் அபிவிருத்தித் தேவைப்பாடு தொடர்பில் கேட்டறியும் கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (30) இஸ்லாமபாத் வீட்டுத்திட்டத்தில் நடைபெற்றது.
இதன்போது கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் பி.ரி. ஜமால், கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம். ஜிப்ரி உள்ளிட்ட பிரதேசவாசிகள் பிரசன்னமாகியிருந்தனர்.
இஸ்லாமபாத் பிரதேசத்திற்கான பொதுநூலகம், கலாசார மண்டபம், சிறியளவிலான தொழில்பேட்டை போன்றவற்றை அமைத்துத் தருமாறு பிரதேசவாசிகள் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக அவற்றை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அத்தோடு இஸ்லாமபாத்தின் உள்ளக வீதி வலையமைப்பு அபிவிருத்தியினை முழுமைப்படுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் இதன்போது தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -