ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் தளபதி ஸ்டாலினை சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது இலங்கையின் சமகால அரசியல் தொடர்பில் திமுக தலைவர் கேட்டறிந்தார். கலைஞரின் மறைவு இலங்கை மக்களுக்கு குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு பேரிழப்பு என்பதையும் கலைஞருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குமிடையிலிருந்த உறவு சம்பந்தமாகவும் இராஜாங்க அமைச்சர் ஸ்டாலினிடம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
இச்சந்திப்பில் இராஜாங்க அமைச்சருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த ஷாகுல் ஹமீத் மற்றும் இராஜாங்க அமைச்சருடன் சென்ற பல முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.