ஏ.ஆர்.எம்.றிபாய் ஏறாவூர்-
கடந்த 04ம் திகதி வெள்ளிக்கிழமை (04 ஜனவரி 2019) *ஏறாவூர் அசோசியேஷன் ஒப் கட்டார்* அமைப்பின் புதிய நிர்வாக தெரிவு நிகழ்வு மிகச்சிறந்த முறையில் இடம்பெற்று முடிந்துள்ளது.
அதனடிப்படையில் புதிய நிருவாக தெரிவுக்குழுவில்,
தலைவர்- சகோ. C.B ஹமீத்.
செயலாளர் - சகோ. D.M றிஸ்வான்.
பொருளாளர் - மௌலவி L.H.M ஷிஹான்.
உப தலைவர் - சகோ. M. றிஸ்வி.
உப செயலாளர் - சகோ. M.I.M. ரூமி.
பொது தொடர்பாடல் அதிகாரி (PRO) - மௌலவி A.M அஷ்ரப்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் - சகோ. M.S மாஹிர்.
ஆகியோர் நிருவாக உறுப்பினர்களால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
அத்துடன் புதிய நிருவாக உறுப்பினர்களாக,
சகோ. A.L அப்துர் ரஹ்மான் , சகோ. A.P.M நிப்ராஸ், சகோ. M.H மஜிவர், மௌலவி M.H.M ஹாபி, சகோ. I.M ஹனீபா, சகோ. S.L முஹம்மது ராசிக் , சகோ. K.M ஹில்மி , சகோ. M. கஸீர் , சகோ. SHM. றிஹான், சகோ. A.M.M சித்தீக்* ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
EAQவின் 2019ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக செயற்திட்டங்களாக,
1) *கட்டார் வாழ் ஏறாவூர் சகோதரர்களின் நலன் கருதிய திட்டம்.
ஊர் சகோதரர்களை சந்தித்து ஒரே குடையின் கீழ் கொண்டு வருதல்.
. தொழில் இல்லாதவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தல்.
கட்டார் நாட்டின் விடுமுறை தினங்களில் ஒன்று கூடல் (விளையாட்டு, களியாட்டம்) ஏற்பாடு செய்தல்.
*கட்டார் நாட்டின் சட்ட திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தல்.
2) ஊர் தழுவிய வேலை திட்டங்கள்.
கல்வி, விளையாட்டு, வாழ்வதாரம், நோயாளிகளின் பராமரிப்புக்கு பங்களிப்புச் செய்தல் மற்றும் போதைவஸ்து அற்ற இளைஞர் சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்புதல்.
போன்ற பணிகளை செய்வதற்கு புதிய நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.